Wednesday, March 11, 2009

மீன் குழம்பு ( FISH CURRY )

தேவையான பொருட்கள்:
மீன் 1 / 2 கிலோ
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 2 பல்
சின்ன வெங்காயம் 3
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு
கறிவேப்பில்லை ஒரு கொத்து
தேங்காய்துருவல் 3 மேசைகரண்டி
மிளகாய் தூள் 3 மேசைகரண்டி
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
மல்லிதூள் 3 மேசைகரண்டி
நல்லெண்ணெய் 3 மேசைகரண்டி
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • முதலில் மீனை கழுவி சுத்தம் செய்துவிட்டு உப்பு, மிளக்காயதூள் சிறிது மஞ்சள்தூள் கொஞ்சம் போட்டு பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளியை பொடியாக கட் பண்ணி வைக்கவும்.
  • புளி கரைத்து வைக்கவும்.
  • சின்ன வெங்காயம் ,பூண்டு ,கறிவேப்பில்லை சிறிது மூன்றையும் நசுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும் பொரிந்ததும் வெந்தயம் போடவும் .
  • பிறகு நசுக்கி வைத்த வெங்காயம்,பூண்டு,கறிவேப்பில்லை விழுதை போட்டு வதக்கவும்.பின்னர் வெங்காயம் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள்,மல்லிதூள்,மிளக்காயதூள்,உப்பு போடவும்.
  • அனைத்தையும் எண்ணெயில் நன்கு வதக்கி பிறகு புளி ஊற்றவும். தேவைப்பட்டால் அதற்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  • இப்போது தேங்காயை நன்கு அரைத்து சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் மீன் துண்டுகளை சேர்க்கவும்.கரண்டி போட்டு கிண்ட வேண்டாம்.மீன் உடைந்து விடும் .
  • மூடி வைத்து அடுப்பை குறைத்து வைக்கவும்.மீன் வெந்தவுடன் இறக்கவும்.
  • மணக்கும் மீன் குழம்பு தயார்.

மீன் ஃப்ரை.( fish fry )

தேவையான பொருட்கள்:
மீன் 1 / 2 கிலோ
மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்.
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
லைம் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்.
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
அரைக்க:
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 / 2 டீஸ்பூன்
மிளகு 1 / 2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
செய்முறை:
  • முதலில் மீனை மஞ்சள் தூள் போட்டு கழுவி நன்றாக சுத்தம் செய்து தண்ணீரை வடித்து கொள்ள வேண்டும்.
  • மேற்குறிய அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துகொண்டு அத்துடன் மிளக்காயதூள்,மஞ்சள்தூள்,உப்பு,லைம் ஜூஸ் கலந்து மீனுடன் பிசறி ஊற வைக்க வேண்டும்.
  • கொஞ்ச நேரம்மாவது ஊற விட்டால்தான் மசாலா மீனில் இறங்கும்.
  • தவ்வாவில் எண்ணெய் விட்டு சூடானதும் இரண்டு இரண்டு துண்டுகளாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
  • சுவையான சூடான மீன் ஃப்ரை ரெடி.

பீர்க்கங்காய் கூட்டு (பீர்க்க்கங்காய் பாசி பருப்பு)

தேவையான பொருட்கள்:
பீர்கங்காய் 1
பாசிபருப்பு 1 கப்
வெங்காயம் 1 (சிறியது)
தக்காளி 1 (சிறியது)
பச்சை மிளகாய் 3
கறிவேப்பில்லை சிறிது
மஞ்சள்தூள் 1 teaspoon
சாம்பார்தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • பீர்கங்காயை தோல் சீவி பொடியாக கட் பண்ணவும்.
  • வெங்காயம் பச்சைமிளகாய்,தக்காளி கட் பண்ணி வைக்கவும்.
  • முதலில் பாசி பருப்பை லேசாக வாசம் வரும் வறுத்துவிட்டு பிறகு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • பருப்பு பாதி வெந்தவுடன் தக்காளி .காய்,உப்பு,மஞ்சள்தூள்,சாம்பார்தூள் அனைத்தும் போட்டு வேக விடவும்.
  • காய் வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பில்லை போட்டு நன்கு வதக்கி வெந்த பருப்பை எடுத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
  • சூடான சாதத்துடன் சாப்பிடவும்.

குறிப்பு:
பருப்பை நன்கு குலைய வேக வைக்க கூடாது.

பீன்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - 1 / 2
காய்ந்த மிளகாய் 4
உளுத்தம்பருப்பு 2டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
தேங்காய்துருவல் 2 மேசைகரண்டி
கருவேப்பில்லை சிறிது
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • பீன்ஸ் பொடியாகவோ அல்லது நீளவாக்கிலோ கட் பண்ணி வைக்கவும்.
  • வெங்காயம் பொடியாக கட் பண்ணவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போடவும்.
  • பின்பு வெங்காயம்,மிளகாய்,கருவேப்பில்லை போட்டு வதக்கி காயை சேர்த்து வதக்கவும்..
  • காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கின பிறகு தண்ணீர் லேசாக தெளித்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
  • காய் வெந்தவுடன் உப்பு சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து1 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

Monday, March 9, 2009

ஸ்பெஷல் முட்டை ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
முட்டை 2
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சமிளகாய் 2
கறிவேப்பில்லை சிறிது
கொத்தமல்லி தலை சிறிது
மிளகு தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை :
  • வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொதமல்லிதலை பொடியாக கட் பண்ணி வைக்கவும் .
  • தனியாக ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்து கட் பண்ணிய அனைத்து பொருட்களுடனும் சேர்த்து உப்பு போட்டு கலக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கலவையை ஊற்றவும்.
  • மிளகு தூளை லேசாக தூவவும்.
  • சிறிது பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக ஆனவுடன் எடுக்கவும்.

அரிசி பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி 2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 3
வர மிளகாய் 3
எண்ணெய் 2 அல்லது 3 மேசைகரண்டி
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பூண்டு 4 பல்
கறிவேப்பில்லை சிறிது
தண்ணீர் 6 கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
  • அரிசியை கழுவி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பருப்பை கழுவி வைக்கவும்.
  • வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கட் பண்ணி வைக்கவும் .
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும் .
  • பிறகு வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் தக்காளி போடவும். தக்காளி வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றவும்.
  • இப்போது உப்பு மஞ்சள் தூள் போடவும். பின்னர் சீரகம்,மிளகு,பூண்டு மூன்றையும் அரைத்து போடவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசிபருப்பை போடவும்.
  • நன்கு கலக்கி குக்கர் மூடி போட்டு வெயிட் போடவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .3 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் .
  • பிரஷர் அடங்கியதும் மூடியை திறக்கவும்.
  • அரிசி பருப்பு சாதம் ரெடி.
குறிப்பு:
சாதத்தில் நெய் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
இது கொங்கு நாட்டு ஸ்பெஷல் .
இது மிக எளிதில் செய்யக்கூடிய சாதம்.

Sunday, March 8, 2009

பாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்)



தேவையான பொருட்கள்:
பாசிபயறு 1 கப்
வெங்காயம் பாதி
தக்காளி சின்னது 1
பச்சை மிளகாய் 5
கறிவேப்பில்லை சிறிது
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பூண்டு 2 பல்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • முதலில் பாசிபயற்றை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும் .
  • பின்பு கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • முக்கால் பதம் வெந்தவுடன் தக்காளி,உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் மூடி வைத்து வேக விடவும்.
  • பருப்பு வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் , வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை,தனியா,சீரகம் (இரண்டையும் கையில் தேய்த்து போடவும் ).
  • அனைத்தையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.வதங்கின பின் வேக வைத்த பயறையும் சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு பூண்டை நசுக்கி போட்டு பருப்பு கடையும் மத்தில் கடையவும்.
  • குழம்பு ரெடி.
சூடான சாதத்தில் குழம்பை ஊற்றி நெய் போட்டு சாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.
குறிப்பு:
பாசி பயறை குக்கரில் வேக வைக்க கூடாது .தனியாக பாத்திரத்தில் வேக
வைத்தால்தான் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ் ( potato podimas )


தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு 4

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 4

கறிவேப்பில்லை ஒரு கொத்து

கொத்தமல்லி தலை சிறிது

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்

கடலை பருப்பு 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

எண்ணெய் 1 கரண்டி

உப்பு தேவையான் அளவு

செய்முறை:


  • முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து லேசாக மசித்து கொள்ளவும்.

  • வெங்காயம் நீளவாக்கில் கட் பண்ணவும். பச்சை மிளகாய் கட் பண்ணி வைக்கவும் .

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும்

  • உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்க்கவும்.

  • இப்போது வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

  • பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும். கிளறவும்.

  • பிறகு மசித்த உருளைகிழங்கையும் சேர்த்து கிளறி அடுப்பை 5 நிமிடம்சிம்மில் வைக்கவும்.

  • இறுதியில் கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.

  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

சிக்கன் பிரியாணி ( chicken briyani )

தேவையான பொருட்கள்:
சிக்கன் 1/2 கிலோ
பாசுமதி அரிசி 3 கப்
இஞ்சி பூண்டு விழுது 4 மேசை கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 1
பச்ச மிளகாய் 5
பொதினா 1 கைப்பிடி நறுக்கியது
கொத்தமல்லி தலை 1 கைப்பிடி நறுக்கியது
தயிர் 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசை கரண்டி
நெய் 2 மேசை கரண்டி
உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
பட்டை 2
கிராம்பு 2
ஏலக்காய் 2
பிரியாணி தலை 2
அன்னாசி பூ 1
செய்முறை:
  • வெங்காயம் நீளமாகவும் ,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும் .
  • அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,பிரியாணி தலை ,அன்னாசி பூ ,ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு பச்ச மிளகாய் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .
  • இப்போது இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும் .
  • பின் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் .அத்துடன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,உப்பு, கொத்தமல்லி தலை ,பொதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .
  • பிறகு தயிரை சேர்க்கவும் .நன்கு கிளறி பத்து நிமிடம் மூடி வைக்கவும் .
  • இப்போது சிக்கன் பாதிக்கு மேல் வெந்து இருக்கும் .இந்த தருணத்தில் அரிசியை சேர்த்து ரொம்ப மெதுவாக அரிசி உடையாமல் கிளறவும் .
  • பின் தண்ணீர் 1 கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு அரிசி உடையாமல் கிளறவும்.நெய் சேர்க்கவும்.
  • இப்போது குக்கர் மூடி போட்டு அடுப்பை குறைத்து வைக்கவும்.
  • ஒரு விசில் விடவும் .அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .
  • பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து மெதுவாக கலக்கவும் .
  • சுவையான கம கமன்னு மணக்கும் சிக்கன் பிரியாணி ரெடி .
குறிப்பு:
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Friday, March 6, 2009

கத்தரிக்காய் கார குழம்பு


தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் 4
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பில்லை சிறிது
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கொத்தமல்லி தூள் 2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு .

செய்முறை:
  • வெங்காயம் ,தக்காளி வெட்டி வைக்கவும் .கத்தரிகாயை அரிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.புளியினை 2கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெந்தயம் போடவும்.
  • பிறகு வெங்காயம் மிளகாய் ,கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
  • பின் தக்காளி மற்றும் கத்தரிக்காயை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வதக்கவும்.
  • இப்போது மஞ்சள் தூள்,மல்லிதூள்.மிளகாய் தூள் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்.
  • கொதித்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
  • பிறகு கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
  • சுவையான கார குழம்பு ரெடி.

சிக்கன் சூப்


தேவையான பொருட்கள்:
சிக்கன் 1 / 4 கிலோ (எலும்புடன்)
வெங்காயம் சின்ன சைஸ் 1
சின்ன தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
ஆயில் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
  • வாணலியில் ஆயில் விட்டு வெங்காயம்,பச்ச மிளகாய் போட்டு வதக்கி பிறகு தக்காளி சேர்க்கவும்.
  • இப்போது இஞ்சிபூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு குலுக்கி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் .
  • இப்போது 4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் மூடி வைக்கவும் .
  • கடைசி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  • இப்போது சிக்கன் நன்கு வெந்து இருக்கும் .
  • அடுப்பில் இருந்து இறக்கி சூப்பில் உள்ள எலும்பை எடுத்துவிட்டு மிளகு தூள் ,கொத்தமல்லி தலை சேர்த்து சூடாக பரிமாறவும் .

குறிப்பு:

சளி உள்ள போது சுட சுட குடித்தால் தொண்டைக்கு நல்ல இதமாக இருக்கும்.

Wednesday, March 4, 2009

பீட்ரூட் துவையல் (Beetroot Chutni)


தேவையான பொருட்கள் :
பீட்ரூட் 1
சின்ன வெங்காயம் 200 கிராம் or பெரிய வெங்காயம் 1
வர மிளகாய் 5
தனியா 1 மேசை கரண்டி
சீரகம் 1 மேசைகரண்டி
தேங்காய் 2 கீற்று
கறிவேப்பில்லை சிறிது
புளி - 2 புளிக்கொட்டை அளவு
ஆயில் 2 மேசை கரண்டி
உப்பு தேவையான அளவு .

செய்முறை:

  • முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும் .
    அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், கறிவேப்பில்லை போட்டு ஆயில் விட்டு வதக்கவும்.
  • வதங்கிய பிறகு பீட்ரூட்டை சேர்க்கவும் . நன்கு வதக்கவும் .
    இப்போது தேங்காய், புளி ,உப்பு சேர்த்து வதக்கவும்.
  • 2 நிமிடம் வதங்கியதும் இறக்கி ஆற வைக்கவும் .ஆறியவுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவும் .

குறிப்பு:

சூடான சாதம்,தோசைக்கு நன்றாக இருக்கும் .

கொள்ளு பருப்பு (கொங்கு நாடு ஸ்பெஷல் )

தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:
  • முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய், தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சை மிளகாய்,மல்லி,சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.
  • சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

ரவா கேசரி


தேவையான பொருட்கள் :
ரவை 1 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் 2
முந்திரி பருப்பு 10
திராட்சை 10
கேசரி பவுடர் 1 சிட்டிகை
நெய் 6 மேசைகரண்டி
செய்முறை:
ரவையை வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு கொஞ்சம் சிவக்க வறுத்து எடுக்கவும் .
முந்திரி,திராட்சையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.ஏலக்காயயை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் என்ற அளவில்
ஊற்றவும் .
கொதித்தவுடன் அதில் ரவையை கொட்டி சிறு தீயில் கட்டி படாமல் கிளறிய வண்ணம் இருக்கவும் .
அத்துடன் கேசரி பவுடரை கரைத்து தேவையான அளவு அதில் விடவும் .
பிறகு சர்க்கரை சேர்த்து ரவையுடன் நன்கு சேரும்வரை கிளறி விட்டு வேகவிடவும் .வருத்த முந்திரி,நெய் அனைத்தையும் போட்டு சுமார் 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கி விடவும் .
பொடித்த ஏலக்காயை தூவி கிளறிவிட்டு முந்திரி,திராட்சை அலங்கரித்து பரிமாறவும் .

Saturday, February 28, 2009

கொத்தவரங்காய் பொரியல்




செட்டிநாடு சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள் :
கோழி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 மேசைகரண்டி
பச்சை மிளகாய் 2
கடல்பாசி 4
கறிவேப்பில்லை 1 கொத்து
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
லெமன் ஜூஸ் 4 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசைகரண்டி
உப்பு தேவையான அளவு .

வறுத்து அரைக்க:
தனியா 7 மேசைகரண்டி
சீரகம் 1/2 மேசைகரண்டி
சோம்பு 1 மேசைகரண்டி

மிளகு 2 மேசை கரண்டி

கசகசா 2 மேசைகரண்டி

பட்டை 3 துண்டு

கிராம்பு 3

ஏலக்காய் 4

ஜாதிபூ 4

அன்னாசி பூ 1

வரமிளகாய் 10

தேங்காய் 2 மேசைகரண்டி

பொட்டுகடலை 1 மேசைகரண்டி

  1. மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும் .
  2. கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து
  3. குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.

செய்முறை:

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடல் பாசி,பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
  • வதங்கிய பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
  • இப்போது தக்காளி சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள் ,மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும் .
  • பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் .
  • சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

இட்லி,கல்தோசை,சாப்பாத்தி ,பரோட்டா,சாதம் அனைத்துடனும் சாப்பிட காரசாரமாக ,சுவையாக இருக்கும்.

Thursday, February 26, 2009

இறால் தொக்கு


தேவையான பொருட்கள்:
இறால் கால் கிலோ
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
மல்லி தூள 1மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 2மேசைக்கரண்டி
சோம்பு 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு தேவையான அளவு
செய்முறை :
  • முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து அத்துடன் மஞ்சள் தூள் ,சிறிது உப்பு ,கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது, கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு சிறிது நேரம் வைக்கவும் .
  • பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஆயில் போட்டு சோம்பு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கின பிறகு மீதியுள்ள இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் .
  • இப்போது தக்காளி சேர்க்கவும் .பிறகு இறாலை சேர்த்து மிளகாய் தூள்,மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.அதுவே தானகவே நீர் விட்டுக்கொள்ளும் .அதனால் தண்ணீர் சேர்க்க வேண்டாம் . தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சிறிது சேர்க்கவும் .
  • நன்கு கிளறி சிம்மில் 10 நிமிடம் மூடி வைக்கவும் .
  • கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும் .
குறிப்பு:
சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும் .

கோழி கொழம்பு


தேவையான பொருட்கள்:
கோழி 1கிலோ
பட்டை 2
கிராம்பு 2
சோம்பு 2ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
கச கச 2ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் 2ஸ்பூன்
மல்லி தூள் 2ஸ்பூன்
தேங்காய் 4ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
வர மிளகாய் 4
முந்திரி 4
வெங்காயம் 2
தக்காளி 2
எண்ணெய் 5ஸ்பூன்
உப்பு தேவையான் அளவு
அரைக்க:
  • மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லிதூள்,சோம்பு,சீரகம்,தேங்காய்,கச கச , முந்திரி அனைத்தையும் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் .
செய்முறை:
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,மிளகாய் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது தக்காளி சேர்க்கவும் .சிறிது வதங்கின பிறகு கோழி துண்டுகளை சேர்த்து வதக்கவும் .
  • நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கி பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை சிறிது குறைத்து வைத்து மூடி வைக்கவும்.
  • பின்பு நன்கு வெந்தவுடன் இறக்கி மல்லி இலைகளை சேர்க்கவும் .
  • சூடான சுவையான கோழி கொழம்பு ரெடி .



Wednesday, February 25, 2009

Fish with Brocolli


தேவையான பொருட்கள் :

Steamed Brocolli


வௌவால் மீன் ப்ரை

  • தேவையான பொருட்கள் :
    மீன் 1kg
    இஞ்சி பூண்டு பேஸ்ட்1tablespoon
    மிளகாய் தூள் 4tablespoon
    மிளகு தூள் 2teaspoon
    மஞ்சள்தூள் 2teaspoon
    எலுமிச்ச பழ சாறு 2tablespoon
    உப்பு தேவையான அளவு
    எண்ணெய் 6tablespoon


மேற்கூறிய அனைத்தையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசறி குறைந்தது 3மணி நேரம் ஊற வைக்கவும் .
செய்முறை :

  • கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மீன் துண்டுகளை போடவும்.
  • சிறிது நேரம் கழித்து வெந்தவுடன் மறு பக்கம் மெதுவாக திருப்பி விடவும்.
  • பின்னர் எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு:
எல்லா வகை மீனும் இப்படி வறுத்தால் சூப்பராக இருக்கும்.லெமன் ரைஸ் ,ஃப்ரயிட் ரைஸ்,சாம்பார் சாதம் அனைத்துக்கும் நல்ல சூப்பர் காம்பினேஷன்.