Wednesday, March 11, 2009

மீன் குழம்பு ( FISH CURRY )

தேவையான பொருட்கள்:
மீன் 1 / 2 கிலோ
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 2 பல்
சின்ன வெங்காயம் 3
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு
கறிவேப்பில்லை ஒரு கொத்து
தேங்காய்துருவல் 3 மேசைகரண்டி
மிளகாய் தூள் 3 மேசைகரண்டி
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
மல்லிதூள் 3 மேசைகரண்டி
நல்லெண்ணெய் 3 மேசைகரண்டி
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
  • முதலில் மீனை கழுவி சுத்தம் செய்துவிட்டு உப்பு, மிளக்காயதூள் சிறிது மஞ்சள்தூள் கொஞ்சம் போட்டு பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளியை பொடியாக கட் பண்ணி வைக்கவும்.
  • புளி கரைத்து வைக்கவும்.
  • சின்ன வெங்காயம் ,பூண்டு ,கறிவேப்பில்லை சிறிது மூன்றையும் நசுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும் பொரிந்ததும் வெந்தயம் போடவும் .
  • பிறகு நசுக்கி வைத்த வெங்காயம்,பூண்டு,கறிவேப்பில்லை விழுதை போட்டு வதக்கவும்.பின்னர் வெங்காயம் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள்,மல்லிதூள்,மிளக்காயதூள்,உப்பு போடவும்.
  • அனைத்தையும் எண்ணெயில் நன்கு வதக்கி பிறகு புளி ஊற்றவும். தேவைப்பட்டால் அதற்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  • இப்போது தேங்காயை நன்கு அரைத்து சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் மீன் துண்டுகளை சேர்க்கவும்.கரண்டி போட்டு கிண்ட வேண்டாம்.மீன் உடைந்து விடும் .
  • மூடி வைத்து அடுப்பை குறைத்து வைக்கவும்.மீன் வெந்தவுடன் இறக்கவும்.
  • மணக்கும் மீன் குழம்பு தயார்.

No comments: