தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 4
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 4
கறிவேப்பில்லை ஒரு கொத்து
கொத்தமல்லி தலை சிறிது
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
கடலை பருப்பு 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 கரண்டி
உப்பு தேவையான் அளவு
செய்முறை:
- முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து லேசாக மசித்து கொள்ளவும்.
- வெங்காயம் நீளவாக்கில் கட் பண்ணவும். பச்சை மிளகாய் கட் பண்ணி வைக்கவும் .
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும்
- உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்க்கவும்.
- இப்போது வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும். கிளறவும்.
- பிறகு மசித்த உருளைகிழங்கையும் சேர்த்து கிளறி அடுப்பை 5 நிமிடம்சிம்மில் வைக்கவும்.
- இறுதியில் கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.
- இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.
No comments:
Post a Comment