Sunday, March 8, 2009

சிக்கன் பிரியாணி ( chicken briyani )

தேவையான பொருட்கள்:
சிக்கன் 1/2 கிலோ
பாசுமதி அரிசி 3 கப்
இஞ்சி பூண்டு விழுது 4 மேசை கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 1
பச்ச மிளகாய் 5
பொதினா 1 கைப்பிடி நறுக்கியது
கொத்தமல்லி தலை 1 கைப்பிடி நறுக்கியது
தயிர் 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 மேசை கரண்டி
எண்ணெய் 4 மேசை கரண்டி
நெய் 2 மேசை கரண்டி
உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
பட்டை 2
கிராம்பு 2
ஏலக்காய் 2
பிரியாணி தலை 2
அன்னாசி பூ 1
செய்முறை:
  • வெங்காயம் நீளமாகவும் ,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும் .
  • அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,பிரியாணி தலை ,அன்னாசி பூ ,ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு பச்ச மிளகாய் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .
  • இப்போது இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும் .
  • பின் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் .அத்துடன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,உப்பு, கொத்தமல்லி தலை ,பொதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .
  • பிறகு தயிரை சேர்க்கவும் .நன்கு கிளறி பத்து நிமிடம் மூடி வைக்கவும் .
  • இப்போது சிக்கன் பாதிக்கு மேல் வெந்து இருக்கும் .இந்த தருணத்தில் அரிசியை சேர்த்து ரொம்ப மெதுவாக அரிசி உடையாமல் கிளறவும் .
  • பின் தண்ணீர் 1 கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு அரிசி உடையாமல் கிளறவும்.நெய் சேர்க்கவும்.
  • இப்போது குக்கர் மூடி போட்டு அடுப்பை குறைத்து வைக்கவும்.
  • ஒரு விசில் விடவும் .அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .
  • பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து மெதுவாக கலக்கவும் .
  • சுவையான கம கமன்னு மணக்கும் சிக்கன் பிரியாணி ரெடி .
குறிப்பு:
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

No comments: