Wednesday, March 4, 2009

கொள்ளு பருப்பு (கொங்கு நாடு ஸ்பெஷல் )

தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:
  • முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய், தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சை மிளகாய்,மல்லி,சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.
  • சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

1 comment:

Malini's Signature said...

சாந்தி உங்க ரெசிபி எல்லாமே ரொம்ப நல்லா இருகுங்க...அதுவும் எல்லாமே கோவை பகுதியில் சமைப்பது போல இருப்பது ஸ்பெசல்... வாழ்த்துகள்